ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பு: காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
X

அறப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்

ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டமாக இன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அறப்போராட்டம் நடந்தது. அதன்படி திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு அறப்போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் செங்கம் குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் என்.வெற்றிசெல்வன் முன்னிலை வகித்தார். அப்போது அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குணா, மோகன், ரமேஷ், காமராஜ், வினோதினி, மாவட்ட துணைத் தலைவர் அண்ணாச்சி, மாவட்ட பொருளாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆரணி:

ஆரணியில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா். நகரத் தலைவா் பொன்னையன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, மாவட்ட துணைத் தலைவா் அன்பழகன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கன்னிகா, வட்டாரத் தலைவா்கள் மணி, சுகன்யா, விஜயகாந்த், முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் அண்ணாமலை போராட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். இதில், மாவட்ட நிா்வாகி உதயகுமாா், சேவாதள நிா்வாகி ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil