/* */

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம்

ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டம்
X

வீட்டை பாடைகட்டி, மாலை அணிவித்து ஊர்வலமாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தூக்கி வந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சியில் ஏரிக்கரை மற்றும் நீர்நிலை பகுதி அருகிலும் 400-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

கோர்ட்டு உத்தரவின்பேரில், மாவட்ட கலெக்டர் பா‌.முருகேஷ் நீர்நிலை பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்படி ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கு.இந்திராணி, சீனிவாசன் ஆகியோர், நீர்நிலை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியவர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

அதில் 15 நாட்களுக்குள் நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர்.

இதனை கண்டித்து நீர்நிலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி வசித்து வரும் 200-க்கும் மேற்பட்டோர் கோட்டை மைதானத்தில் இருந்து வீட்டை பாடைகட்டி, மாலை அணிவித்து ஊர்வலமாக ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு தூக்கி வந்தனர்.அங்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார்

Updated On: 23 March 2022 1:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்