குழந்தையை கடத்த வந்ததாக கூறி மனநல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தர்ம அடி

குழந்தையை கடத்த வந்ததாக கூறி மனநல பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தர்ம அடி
X

 குழந்தையை கடத்த வந்ததாக கூறி மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய பொதுமக்கள்

ஆரணி அருகே கண்ணமங்கலம் பகுதியில் குழந்தையை கடத்த வந்ததாக கூறி மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கி காவல்நிலையத்தில் ஓப்படைத்த மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் பேரூராட்சி அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தில்குமார் அஞ்சலா தம்பதியினரின் 3வயது ஆண் குழந்தை சந்தோஷ் வீட்டின் வெளியே இன்று காலை விளையாடி கொண்டிருந்தார். மேலும் அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது அறிமுகம் இல்லாத ஓரு பெண் குழந்தை கையில் தூக்கி வைத்து கொண்டிருந்த கண்டு குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதனையடுத்து அந்த பெண்ணை அப்பகுதி பொதுமக்கள் குழந்தையின் உறவினர்கள் ஆகியோர் சராமரியாக தாக்கி தர்ம அடி கொடுத்தனர். பின்னர் தகவலறிந்து விரைந்த சம்பவடத்திற்கு வந்த கண்ணமங்கலம் போலீசார் அந்த பெண்ணை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிந்தது. அவர் குறித்த விபரங்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!