மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்..!
மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்
ஆரணி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் சரவணன் கலந்து கொண்டார் .
மேலும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக வந்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்கிடவும் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி அனைவருக்கும் 10லட்சம் உயர்த்தி அரசு வீடு வழங்கிடவும், ஆரணி வட்டம் தச்சூர் இருளர் மக்கள் குடியிருப்பு பகுதியில் வடிநீர் கால்வாய், தெருவிளக்கு, தனிநபர் கழிப்பறை, இடுகாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மலைவாழ் மக்கள் பாராம்பரிய நடனமாடியும் பாடல் பாடியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க சார்பில் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியனிடம் கோரிக்கைக மனு அளித்தனர். மனுவை பெற்ற கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மு.தலைவர் கண்ணன் பொதுச்செயலாளர் அய்யனார் மாவட்ட தலைவர் மணிமாறன் மாவட்ட செயலாளர் உதயகுமார் துணை தலைவர் அப்பாசாமி வட்டார செயலாளர் ரமேஷ் பாபு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu