இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

 மேற்கு ஆரணியில், இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டாரத் தலைவர் எஸ்.பாலசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், 100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்கள் நேரத்தை மாற்றி அமைத்ததை கண்டித்தும், மீண்டும் அதே பழைய நேரத்தை ஒதுக்கி தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

தற்போது, விவசாயப்பணி நடைபெறாத காரணத்தால் வேலையின்றி தவிக்கும் மக்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், அனைவருக்கும் 100 நாள் வேலை உத்தரவாதம் அளிக்க வேண்டும், அரசு நிர்ணயித்த கூலியான ரூ.273-யை வழங்க வேண்டும் எனக் கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் விஜயன், பொருளாளர் முருகப்பன், மாவட்ட செயலாளர் எம்.பிரகலநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சி.அப்பாசாமி, பி.கண்ணன், வட்டாரச் செயலாளர் ரமேஷ் பாபு உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தச்சூரை சேர்ந்த சாம்பசிவம் நன்றி கூறினார்.

Tags

Next Story
why is ai important to the future