தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: கனிமொழி எம்பி
நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்பி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் நிகழ்ச்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட செயலாளர் தரணி வேந்தன் அனைவரையும் வரவேற்றார்.
துணை சபாநாயகர் பிச்சாண்டி மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ. வ. வே. கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்,
தொடர்ந்து விவசாயிகள், நாடகக் கலைஞர்கள், அர்ச்சகர்கள், வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் கருத்துக்களையும் கனிமொழி எம்பி பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்பி; தமிழகம் முழுவதும் திமுக தலைவரின் அறிவுறுத்தலின்படி அனைத்து தொகுதிகளிலும் பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுகளை பெற்று வருகின்றோம். மக்களின் கோரிக்கை மனுக்களில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும், மேலும் தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்தால் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசிடம் கோரிக்கைகள் உள்ளன தமிழ்நாட்டிற்கு இருபதாயிரம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை உள்ளன .
உத்திரபிரதேசத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரியில் இரண்டு ரூபாய் திருப்பி வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஜிஎஸ்டி வரியில் வெறும் 26 பைசா மட்டுமே வழங்கப்படுகின்றன.
இந்தியா கூட்டணியில் திமுக இடம் பெறுவது என்பது உறுதியான ஒன்று, ஆனால் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்று திமுக தொகுதி பங்கிட்டு குழுவினர் மூலம் முடிவு செய்யப்படும்.
மேல்மா சிப்காட் விவகாரத்தில் அரசு தலையிட்டு விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து சுமூக முடிவு எடுக்கப்படும் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் அகமதுல்லா, இளங்கோவன், விஜயன், அரசு கொறடா கோவி. செழியன், சென்னை மேயர் பிரியா, திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் எழிலன், எழிலரசு, கிரி, சரவணன், ஜோதி, அம்பேத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள், நகர மன்ற தலைவர்கள், ஒன்றிய செயலாளர் மற்றும் திமுக ஒன்றிய நகர நிர்வாகிகள், பொதுமக்கள், வியாபார சங்கத்தினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu