ஆரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

ஆரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத் துறை முதன்மை செயலாளர்.

ஆரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா், ஆரணி அரசு மருத்துவமனையில் அதிகாரிகளுடன் இரவு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி , திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு 8 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனையில் உள்ள வார்டுகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

அப்போது, மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவுக்குச் சென்று சிகிச்சை பெற்றும் நோயாளிகளிடம் மருவத்துவ வசதிகள் மற்றும் மருத்துவா்கள் உரிய நேரத்துக்கு வந்து சிகிச்சை அளிக்கிறாா்களா மருந்து மாத்திரைகள் சரியாக கிடைக்கிா என கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அறுவை சிக்சை அறை, மருந்தக அறை, காசநோய் பிரிவு, அவசர சிகிச்சை, ஆண்கள், பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, பிரசவ வாா்டுகள் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

திருவண்ணாமலை மாவட்ட அனைத்து அரசு மருததுவமனைகளிலும் பராமரிப்புப் பணிகள் திருப்திகரமாக உள்ளன.

ஆரணி அரசு மருத்துவமனைக்கு ரூ.2 கோடியே 20 லட்சத்தில் அதிநவீன சி.டி. ஸ்கேன் வசதி தொடங்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சி.டி. ஸ்கேன் வசதியை தொடங்கிவைக்க சுகாதாரத் துறை அமைச்சா் வருகை தர உள்ளாா்.

ஆரணி அரசு மருத்துவமனையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது. மருத்துவமனை சுற்றிலும் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றினையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைக்காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய கொசு உற்பத்தி அதிகரிக்கும். ஆகவே டயர், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் கவர்கள் போன்றவைகளை உடனுக்கு உடன் அழித்து விட வேண்டும்.

குழந்தை திருமணங்களை தடுக்க கல்வித்துறை மூலமாகவும், சமூக பாதுகாப்புத்துறை மூலமாகவும், காவல்துறை மூலமாகவும் பெண் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி செவிலியர்கள் மூலமாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆரணி அரசு மருத்துவமனைக்கு தேவைகள் குறித்து தகவல்களை கேட்டு அறிந்து அவற்றினை வரும் பட்ஜெட் கூட்டத்திலேயே தகவல் தெரிவித்து வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாபுஜி நவமணி, மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) நந்தினி, ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் தனலட்சுமி, தாசில்தார் மஞ்சுளா, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், டாக்டர் கவிமணி மற்றும் மருத்துவ குழுவினர்கள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story