100 சதவீதம் குடிநீர் இணைப்பு பெற்ற வெள்ளேரி கிராம மக்களுடன் பிரதமர் மாேடி உரையாடல்

100 சதவீதம் குடிநீர் இணைப்பு பெற்ற வெள்ளேரி கிராம மக்களுடன் பிரதமர் மாேடி உரையாடல்
X

ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தினருடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராமத்தினருடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு பெற்ற கிராம ஊராட்சி மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

தமிழகத்தில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள வெள்ளேரி கிராம ஊராட்சி மக்களிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் வெள்ளேரி ஊராட்சி மன்ற தலைவர் சுதா, மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளேரி கிராமத்தில் 414 வீடுகள் உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது: ஜல்ஜீவன் திட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களும் குடிநீர் இணைப்பு ஏற்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. அனைவரும் பங்கேற்பதற்கு இந்த இயக்கம் உதவும்.

மேலும், கிராமங்கள் அனைத்து பெண்களால் நடத்தப்படும் ஒரு இயக்கமாகும். பொதுமக்கள் பங்கேற்பு காரணமாக மிகப்பெரிய இயக்கமாக மாறியது. அனைத்து தரப்பு தகவல்களும் ஜல்ஜீவன் செயலியில் உள்ளது. தற்போது வரை 5 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளை காட்டிலும், கடந்த 2 ஆண்டுகளில் அதிகமான பணிகளை செய்துள்ளோம். மேலும், ரயில்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலமாக நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தண்ணீர் எடுத்து செல்லும் நிலை ஏற்படக்கூடாது. இதனை அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.

கிராம பஞ்சாயத்துக்கு அதிகமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் நாம் குடிநீர் வழங்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதே முன்னுரிமை கொடுத்தேன். எனவே குடிநீரை சேமிப்பதற்காக பொதுமக்கள் தங்களின் பழக்க வழக்கங்களை மாற்றி கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி 1.5 லட்சம் சுகாதார மையங்கள் கட்டப்பட்டுள்ளது. 300க்கும் அதிகமான பயோ காஸ் திட்டங்களை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கிராம சபை கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி கேட்ட வினாக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதிலளித்தார்.

சுதா அவர்களே எப்படி உள்ளீர்கள்? என பாரதப்பிரதமர் கேட்ட கேள்விக்கு ,பாரதப் பிரதமர் அவர்களே நான் நலமுடன் உள்ளேன், தங்களிடம் பேச வாய்ப்பு கிடைத்ததற்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், என ஊராட்சி மன்றத் தலைவர் சுதா தெரிவித்தார்.

உங்கள் கிராமத்தில் வேறு ஏதாவது சிறப்பு உள்ளதா என பிரதமர் கேட்டறிந்தார்.

அதற்கு சுதா அவர்கள் எங்கள் கிராமத்தில் 20 சதவீதம் பேர் நெசவாளர்கள் அவர்கள் உலகத்தரம் வாய்ந்த காஞ்சிபுரம் பட்டுக்கு இணையாக ஆரணி பட்டு தயாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் பட்டுக்கு இணையாக ஆரணி பட்டு இருப்பதால் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர் என தெரிவித்தார்.

கிராம தலைவரான தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்களுக்கும் பெருமையாக இருக்கும் அல்லவா?

ஆமாம்! சார் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். குழாய் நீர் மூலம் வாழ்வில் வசதி வந்துள்ளது. வாழ்வது எளிமையாக உள்ளது என ஊராட்சி மன்றத்தலைவர் சுதா பதிலுரைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ், ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், காவல்துறை அதிகாரிகள், உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!