ஆரணியை அடுத்த சந்தவாசல் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்

ஆரணியை அடுத்த சந்தவாசல் பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
X
ஆரணியை அடுத்த சந்தவாசல் பகுதியில் நாளை (16.12.2021) வியாழக்கிழமை மின் நிறுத்தம்.

ஆரணியை அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பணிகள் காரணமாக நாளை 16-ஆம் தேதி (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனால் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சந்தவாசல், கல்வாசல் ஏரிக்குப்பம், பாளையம், நடுக்குப்பம், படவேடு, கஸ்தம்பாடி, வடமாதிமங்கலம், விலாங்குப்பம், மருத்துவம்பாடி, அத்தி மலைப்பட்டு, அம்மாபாளையம், ஒண்ணுபுரம், பாரியூர், ராமநாதபுரம், அனந்தபுரம், கொளத்தூர், மேல் நகர், கண்ணமங்கலம், வண்ணாங்குளம், காளசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஆர். ரவி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி