சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் திடீர் பள்ளம்

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் திடீர் பள்ளம்
X

தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் மழைநீர் தேங்கி பள்ளம் உருவாகியுள்ளது

வந்தவாசி சாலையில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாததால் மழைநீர் தேங்கி பள்ளம் உருவாகியுள்ளது.

சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில் தனியார் கேபிள் பராமரிப்பு பணிக்காக பள்ளம் தோண்டி கேபிள் ஒயர் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பணிகளை முடித்த பின்பு அந்தப் பள்ளங்களை சரியாக மண் போட்டு மூடாமல் சென்றுவிட்டனர்.

நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மண் சரிந்து, பள்ளங்கள் முழுவதும் நீர் நிரம்பி உள்ளது. அந்த சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு நீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தனியார் கேபிள் உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு நாளைக்குள் சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!