முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி தபால் வாக்குப்பதிவு தொடக்கம்

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி தபால் வாக்குப்பதிவு தொடக்கம்
X

அஞ்சல் வாக்கு பெட்டியில் வாக்களித்த மூத்த குடிமக்கள்

ஆரணியில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி தபால் வாக்கு பதிவு தொடங்கியது.

ஆரணி மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 708 பேரிடம் வெள்ளிக்கிழமை தபால் வாக்குகள் பெறப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் பெறுவதற்கான குழுவை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

மேலும் ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 19 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் வந்து வாக்குப்பதிவு செய்ய இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட 373 முதியோர்கள் மற்றும் 335 மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 708 வாக்காளர்களிடமிருந்து 12 டி படிவங்கள் பெறப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி ஆகியோரின் வாக்குகளை தபால் வாக்காக பதிவு செய்ய 10 குழுக்கள் அமைத்து ஏப்ரல் 5, 6 மற்றும் 8 ஆகிய மூன்று நாட்களில் வாக்காளர்கள் வீட்டுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்யும் பணிகளை தேர்தல் அலுவலர்கள் தொடங்கினார்கள். ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியன், அனைத்து தேர்தல் பணியாளா்கள் முன்னிலையில் விடியோ பதிவோடு வாக்குப் பெட்டிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டு மண்டல குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, குழுவினா் ஆரணியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று விடியோ பதிவுடன் தபால் வாக்குகள் பெற்றனா்.

அவர்களுடன் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளா் செந்தில்குமாா், ஆரணி வட்டாட்சியா் மஞ்சுளா, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் திருமலை, வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி, மண்டல துணை வட்டாட்சியா்கள், மண்டல துணை வட்டாட்சியா் தேவி, வருவாய் ஆய்வாளா் வேலுமணி, கிராம நிா்வாக அலுவலா்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சென்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!