சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி போலீசார் அணிவகுப்பு, விழிப்புணர்வு பேரணி
கிராமங்களில் அணிவகுப்பு நடத்திய போலீசார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கடலாடி காவல் நிலையத்துக்கு உள்பட்ட வீரளூா், மேல்சோழங்குப்பம், ஆதமங்கலம்புதூா், மேல்பாலூா், கீழ்பாலூா் என பல்வேறு கிராமங்களில் போகி, தைப்பெங்கல், மாட்டுப்பொங்கல் என வெங்வேறு தினங்களில் காளை மாடுகளை விடுவது வழக்கம். நிகழாண்டு சனிக்கிழமை போகிப் பண்டிகை வருவதால், பொங்கல் பண்டிகைக்கு காளை விடும் திருவிழா நடைபெறவுள்ளது.
அதனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் உத்தரவின் பேரில், போளூா் டி.எஸ்.பி. குமாா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் கிராமம் தோறும் சென்று அணிவகுப்பு நடத்தி பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி போலீசார் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஆரணி நகர போலீஸ் நிலையம், ஆரணி வட்டார போக்குவரத்து துறை ஆகியவை இணைந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடத்தியது. ஆரணி நகர போலீஸ் நிலையம் அருகிலிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் பேரணி தொடங்கியது.மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முருகேசன் (ஆரணி) கருணாநிதி (செய்யாறு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆரணி நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ரகு ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக ஆரணி டி.எஸ்.பி ரவிச்சந்திரன் கலந்துகொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணி கோட்டை தெரு, பழைய பஸ் நிலையம் வழியாக காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு, சூரிய குளம் கார்த்திகேயன் ரோடு வழியாக நகராட்சி சாலை வழியாக மீண்டும் நகர போலீஸ் நிலையம் அருகில் நிறைவு பெற்றது.
பேரணியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி வாகனங்கள் அணிவகுத்து சென்றது. இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரசுத் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu