ஆரணி நகர் மன்ற உறுப்பினர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம்

நகரமன்ற உறுப்பினர்களுடன் போலீசார் கலந்தாய்வு கூட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையில் ஆரணி நகரசபை உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பஸ் நிலையங்களில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை கேலி செய்யும் சம்பவம் நடைபெறுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணகிரி சத்திரம் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
பழைய பஸ் நிலையம் அருகே சாலையின் மத்தியில் போடப்பட்டுள்ள பேரிக்காடு அகற்றி போக்குவரத்து வசதி மேம்படுத்திட வேண்டும்என நகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு உடனடியாக தீர்வு காண்பதாக போலீசார் பதிலளித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu