தேர்வுக்கு பயந்து பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

தேர்வுக்கு பயந்து பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
X
தேர்வுக்கு பயந்து பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தேர்வுக்கு பயந்து பிளஸ்-1 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

களம்பூர் தந்தை பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனுசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 17). களம்பூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். இன்று (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. இதனால் தேர்வுக்கு படிக்குமாறு அவரது தாய் கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். சகோதரி நிவேதாவும் கல்லூரிக்கு சென்று விட்டார்.

வீட்டில் தனியாக இருந்த விக்னேஷ் தேர்வுக்கு பயந்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார். மாலையில் கல்லூரி முடிந்து வீடு திரும்பிய நிவேதா, தனது தம்பி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மாணவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!