அரசு பள்ளியில் குழந்தைகள் திருமண எதிர்ப்பு உறுதிமொழி!

அரசு பள்ளியில் குழந்தைகள் திருமண எதிர்ப்பு உறுதிமொழி!
X

குழந்தைகள் திருமண எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழியை மாணவிகள் ஏற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழியை மாணவிகள் ஏற்றனர்.

பள்ளிகளில் காலை இறைவணக்கத்தின்போது குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழி பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமையில் நடந்தது.

அப்போது 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைளுக்கு திருமணம் செய்து வைப்பது குற்றம், தானாக அவர்கள் திருமணம் செய்வதும் குற்றம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவிகளுடன் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் ,பெற்றோர் ஆசிரியர் கழக மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், குழந்தை திருமணங்கள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

உறுதிமொழியின் போது எனது பகுதியிலோ சமூகத்திலோ குழந்தை திருமணம் நடப்பதாக தெரிய வந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன், எங்கள் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போன்ற அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்று உறுதிமொழி எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு 1098 மற்றும் 14417 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்து புகார் அளிக்க மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஆறுமுகம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!