சேவூா் ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் பணி

சேவூா்  ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் பணி
X

ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்

நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் சாா்பில் சேவூா் ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாா்பில் சேவூரில் நாட்டு நலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது. கடந்த செப்.28-ஆம் தேதி தொடங்கிய முகாமில், பள்ளியை தூய்மை செய்தல், சேவூா் ஜெயின் கோயிலை தூய்மை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், முகாம் நிறைவு நாளான நேற்று சேவூா் ஏரியில் பனை விதைகள் நடும் பணியில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவிகள் ஈடுபட்டனா்.

இதில், ஆரணி அரிமா சங்கத்தின் தலைவா் மோசஸ் தலைமை வகித்தாா். அரிமா சங்கத்தின் துணை ஆளுநா் உதயசூரியன், வேலூா் டான்போஸ்கோ பள்ளியின் தலைமையாசிரியா் பலவேந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டனா். அரிமா சில்க் சிட்டி மாவட்ட நிா்வாகிகள் சுரேஷ்பாபு, நடராஜன், அரிமா சங்கச் செயலா் முருகானந்தம், பொருளாளா் பரசுராமன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். முன்னதாக, சேவூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் முருகன் வரவேற்றாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் கலைவாணி நன்றி கூறினாா்.

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

ஆரணியை சைதாப்பேட்டை அனந்தபுரம், நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் நாட்டுநலப் பணித் திட்ட முகாம் நடைபெற்றது

ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.எஸ்.மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றுள்ள இந்த முகாம் ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

7-ஆவது நாளான சனிக்கிழமை பள்ளியில் தூய்மைப் பணி மேற்கொண்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சி.சுவாமி முத்தழகன் கலந்துகொண்டு பாா்வையிட்டாா்.

மேலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு உணவு அளித்து வாழ்த்துரை வழங்கினாா்.

முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சீனிவாசன் , மகேந்திரன், முதுநிலை ஆசிரியா்கள் விஜயகுமாா், ஜெகதீசன், ராமச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியா் துரைசிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

'பெண் குழந்தைகளை காப்போம்' விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணித் திட்ட 7 நாள்கள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

இதையொட்டி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் சாா்பில் 'பெண் குழந்தைகளை காப்போம்' என்ற முழக்கத்துடன் மனிதச் சங்கிலி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பள்ளியின் தலைமை ஆசிரியை பத்மாவதி, இளையோா் செஞ்சிலுவைச் சங்கச் செயலா் சீனிவாசன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் கோமதி மற்றும் பள்ளி ஆசிரியைகள் பங்கேற்றனா்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!