மாமியார் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த மருமகன் பலி

மாமியார் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த மருமகன் பலி
X
மாமியார் சடலத்தை அடக்கம் செய்ய இறுதிச்சடங்கு பொருட்களை வாங்கி சென்ற மருமகன், லாரி மோதி பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த செவரப்பூண்டியை சேர்ந்தவர் மேனகா, 75, உடல்நலக்குறைவால் காலமானார். அதே ஊரை சேர்ந்த அவரது மருமகன் ராஜா, 50, மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர். அவரது இறுதிச்சடங்கிற்கான பொருட்களை வாங்கி வர, தன் உறவினர் ஒருவருடன் டி.வி.எஸ். பைக்கில் நம்பேடு கிராமம் சென்று, பொருட்களை வாங்கி கொண்டு சாலையோரம் நின்றிருந்தார்.

அப்போது அந்த வழியாக போளூரில் இருந்து, சேத்துப்பட்டு நோக்கி சென்ற லாரி, ராஜா மீது மோதியதில் படுகாயமடைந்தார். அவர் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!