மணல் கடத்தலை தடுத்த அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் கமண்டல நாகதநிதியில் மணல் கடத்தலை தடுக்க, ஆர்.ஐ.,உதயகுமார், களம்பூர் வி.ஏ.ஓ.,சசிகுமார், களம்பூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மேட்டுக்குடிசை அருகே, ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் மணல் கடத்தியது தெரியவந்தது.
டிராக்டரில் இருந்த பாலம்பாக்கம் ராஜேஷ், அரியாத்துார் சுரேஷ், கூடலுார் மகேஷ், சக்திவேல், ஆகியோர் டிராக்டரை எதற்காக நிறுத்துகிறீர்கள் என கேட்டு, அதிகாரிகளை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் ராஜேஷ், மகேஷ், சக்திவேல், டிராக்டருடன் தப்பினர்.
இது குறித்து களம்பூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சுரேஷ் என்பவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய மூவரை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu