சேத்துப்பட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்

சேத்துப்பட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் பறிமுதல்
X

பைல் படம்

சேத்துப்பட்டில் காவல்துறை வாகன சோதனையின்போது தடைசெய்யப்பட்ட புகையிலைபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்

சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ரகசிய தகவலின் படி வேலூர் ஆர் என் பாளையத்தை சேர்ந்த சையத் அப்துல் சமத் மகன் இஸ்மாயில் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த போதை பாக்குகள் ஹன்ஸ் மற்றும் கூல் லீ ப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!