அரசு மருத்துவமனை முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
ஆரணி அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆ ரணி டவுன் பகுதியில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனைக்கு ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் 600 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் ஆரணி அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, அல்லது வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து விடுவதாக கூறப்படுகிறது.
மேலும் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு சிகிச்சைக்கு அனுமத்திக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் ஸ்கேன் வசதி இருந்தும் வெளியே சென்று ஸ்கேன் எடுத்து வர கூறப்பட்டதாக தெரிவிக்கின்றனர். மேலும் மாற்றுதிறனாளி பழனிக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறையை கண்டித்து அனைத்து வகை மாற்று திறனாளி சங்கம் சார்பில் கண்டன முழக்கங்களை எழுப்பி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டும் அரசு மருத்துவ அதிகாரிகள் யாரும் பேச் சுவா ர்த்தைத்கு வராததால் ஆத்திரமடைந்த மாற்று திறனாளிகள் மருத்துவமனை நுழைவாயில் நுழைய முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுக்க முயன்ற போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்ட மருத்துவ துணை இயக்குனர் அசோக், ஆரணி அரசு மருத்துவமனையில் மாற்று திறனாளி சங்கத்தகனருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் கோரிக்கை மற்றும் புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைதொடர்ந்து மாற்று திறனாளி சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது மாற்று திறனாளி நபர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 200க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu