மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பெற்றோர்கள் கோரிக்கை

மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை  இயக்க பெற்றோர்கள் கோரிக்கை
X

பேருந்தில் ஏறுவதற்கு குவிந்திருக்கும் மாணவிகள்

பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் வசதிக்காக மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறந்த நிலையில், மாலை பள்ளி முடிந்து, தங்களது கிராமத்திற்கு செல்ல ஆரணி பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ மாணவிகள் அரசு பஸ்சில் இடம் பிடிக்க போட்டி போட்டுக் கொண்டு ஏறினர். இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகிறது.

எனவே மாணவர்கள் வீடு திரும்பும் மாலை வேளைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்