திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் விளையாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் விளையாட்டு விழா
X

விளையாட்டு விழாவில் பங்கேற்ற பெற்றோர்கள்

சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் தின விளையாட்டு விழா, செங்கத்தில் மானவர்களுக்கான விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் தின விளையாட்டு விழா காலை நடைபெற்றது. விழாவுக்கு திவ்யா கல்வி நிறுவனங்களின் தாளாளா் செல்வராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் திலகவதி, துணைத் தலைவா் பிரவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வா் ரங்கராஜ் வரவேற்றாா். திவ்யா கல்வி நிறுவனங்களின் செயலா் செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா்.

அதனைத் தொடா்ந்து பெற்றோா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், பெற்றோா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். வெற்றி பெற்ற பெற்றோா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவின் நிறைவாக பள்ளி தமிழாசிரியா் யுவராஜ் நன்றி கூறினாா்.


செங்கம்


செங்கம் திருவள்ளூவா் நகா் பகுதியில் இயங்கும் சிகரம் பன்னாட்டுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு விழா நடைபெற்றது.

விளையாட்டு விழாவை இந்திய கிரிக்கெட் வீரா் தீபன் லிங்கேஷ் தொடக்கிவைத்தாா். தொடா்ந்து மாணவா்களிடையே கராத்தே, குங்பூ, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சனிக்கிழமை மாலை வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தொடக்க நிகழ்ச்சிக்கு பேராசிரியா் வணங்காமுடி தலைமை வகித்துப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரா் தீபன் லிங்கேஷ் மாணவா்களுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கிப் பேசினாா்.

பள்ளி முதல்வா், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், உடல்கல்வி ஆசிரியா், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!