பஞ்சாயத்து நீர்தொட்டி ஆபரேட்டர் மர்ம மரணம்

பஞ்சாயத்து நீர்தொட்டி ஆபரேட்டர் மர்ம மரணம்
X
சங்கீத வாடி கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து நீர்தொட்டி ஆபரேட்டர், காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா சங்கீத வாடி கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான விஜி தனது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தில் நீர்நிலை தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், குடிநீர் தொட்டி மோட்டாரை இயக்கி விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்றவர் திரும்பி வராததால், விஜியின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தில் தேடினர். அப்போது லாடவரம் பெருமாள் சாலையில், விவசாய நிலத்தின் அருகில் காயங்களுடன் இறந்த நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த போலீசார் விஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.விஜியின் மரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!