ஆரணி அருகே டிராக்டர் மோதி ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு

ஆரணி அருகே டிராக்டர் மோதி ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஆரணி அருகே பைக் மீது டிராக்டர் மோதி ஊராட்சி மன்ற தலைவர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முக்குரும்பை ஊராட்சி மன்ற தலைவராக அண்ணாமலை (வயது 52) என்பவர் பதவி வகித்து வந்தார்.

தி.மு.க. பிரமுகரான இவர் இன்று அதிகாலை களம்பூர் பகுதியிலிருந்து தனது வீட்டிற்கு முக்குரும்பை கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆத்துவாம்பாடியிலிருந்து களம்பூர் நோக்கி வந்த டிராக்டர் அண்ணாமலை பைக் மீது மோதியது. இதில் அண்ணாமலை பலத்த காயத்துடன் மயங்கிக்கீழே விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அண்ணாமலையை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக அவரின் உடலை ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது