ஆரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை
ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
ஆரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவிகாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேவிகாபுரம் கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய நாயகி சமேத கனககரேஸ்வரர், திருக்கோவில் விளங்கி வருகின்றது.
இந்த திருக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேவிகாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் தினதூரம் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் கோவில் குளம் அருகே கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மிகவும் துர்நாற்றம் வீசி வருவதாகவும் , சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் சில சமூகவிரோதிகள் அந்த குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் காற்று மாசு ஏற்பட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கண் எரிச்சல் , சுவாச பிரச்சனைகள் உள்ளிட்ட உடல் உபாதைகளால் மிகவும் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இதனால் தேவிகாபுரம் ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பு பாஜகவினர் கோவில் குளத்து அருகே குப்பைகளை அகற்ற வேண்டி ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கோவில் நிர்வாகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குளம் அருகே உள்ள குப்பைகளை அகற்றவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாஜகவினர் எடுத்துரைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மண்டல தலைவர் தேவராஜ், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் தாமோதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu