இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?

இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா?
X

ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த ஆண்டிபாளையத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது

ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் 1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது கட்டிடத்தின் மேல் பகுதியில் சிமெண்ட் பூச்சு உதிர்ந்து கம்பி வெளியே தெரியும்படி பழுதாகி உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் ஒழுகி சிமெண்ட் மேலிருந்து விழுகிறது. இதனால் தற்காலிகமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள நூலக கட்டிடத்திற்கு மாற்றி ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு கொண்டுள்ளது.

புதிய ஊராட்சிமன்ற கட்டிடம் வேண்டி கிராம சபை உள்ளிட்ட கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும் அதிகாரிகளும் ஊராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தர ஆவன செய்ய வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!