அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
X

காரைகள் பெயர்ந்து அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

சேத்துப்பட்டு ஒன்றியம் கொழாவூர் ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கொழாவூர் ஊராட்சியில் ஆறு வார்டுகள் உள்ளன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் ஐந்துக்கும் மேற்பட்ட சிறு குடி நீர் தொட்டிகள் உள்ளன.

அங்கன்வாடி மையம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 35 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் அருகே நியாய விலைக்கடை, அரசு தொடக்கப் பள்ளி ஆகியவை இயங்கி வருகின்றன. கடந்த 2012 - 13 ஆண்டில் ரூபாய் 81 ,000 மதிப்பீட்டில் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன.

தற்போது நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் பகுதி ,தூண் ஆகிய பகுதிகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன மேலும் கம்பிகள் துருப்பிடித்து வெளியில் தெரிகின்றன. எனவே விபத்து ஏற்படும் முன்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவர் கன்னியம்மாள் கூறும்போது நீர்த்தேக்க தொட்டியின் நிலை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் புதிய தொட்டி அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம் , ஒன்றிய நிதியை எதிர்பார்த்து உள்ளோம் என தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!