தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக முன்னாள் படை வீரர்களுக்கு இ-சேவை மையம் திறப்பு
முன்னாள் படைவீரர்களுக்கு இ-சேவை மையத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்களுக்கு என இ சேவை மையத்தை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார்.
தமிழகத்திலேயே முதன் முறையாக முன்னாள் படை வீரர்களுக்கென ஆரணி வட்டம், கண்ணமங்கலம் அருகேயுள்ள கொங்கராம்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தினை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் , ஆரணி வட்டம், கொங்கராம்பட்டு கிராமத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான இலவச இணையசேவைகள் வழங்கும் மையத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் திறந்து வைத்தார்.
இத்திட்டம் நமது மாநிலத்திலேயே முதல்முறையாக முன்னோடி திட்டமாக முன்னாள் படைவீரர்களுக்கு இலவச மாக சேவைகள் வழங்கும் திட்டம் ஆகும். இந்த இ-சேவை மையம் மூலமாக தரைப்படை, கடற்படை, விமானப்படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளில் பணியாற்றி வெளிவந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு கீழ்காணும் நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
முன்னாள் படைவீரர்கள், விதவையர்களுக்கு அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பம், முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் ECLIG கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பம், முன்னாள் படை வீரர்களின் சிறார்களுக்கு வழங்கப்படும் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பம், முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் கல்வி நிலையங்களில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று கோரும் விண்ணப்பம், முன்னாள் படைவீரர்களின் மகள்களுக்கு திருமண நிதியுதவிக்கான விண்ணப்பம், மத்திய அரசின் வறிய நிலையில் உள்ள ஓய்வூதியம் பெறாத முன்னாள் படைவீரர்கள், விதவையர்களுக்கு வறியோர் நிதியுதவிக்கான விண்ணப்பம் போன்ற மத்திய (ம) மாநில அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களுக்கான விண்ணப்பம் இலவசமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இச்சேவை மூலமாக ஆரணி, கண்ணமங்கலம், போளுர், வந்தவாசி சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் சுமார் 4,500- க்கும் மேலான முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் பயன்பெறுவர்.
நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர், ஸ்குவாட்ரன் லீடர் சுரேஷ் நாராயணன் (ஓய்வு) , முன்னாள் படை வீரர்கள், மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu