அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில் பாடம்

அரசு பெண்கள் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில்  பாடம்
X

தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு நேரடியாக வந்திருந்து மாணவிகளுக்கு  இணைய வழி மூலமாக பாடவாரியாக பாடம் நடத்தி வருகின்றனர்

ஆரணி அருகே தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இணைய வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணைய வழியில் வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேவிகாபுரம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் 100% பள்ளிக்கு நேரடியாக வந்திருந்து ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பள்ளியில் இருந்தே இணைய வழி மூலமாக பாடவாரியாக பாடம் நடத்தி வருகின்றனர்.

இதில் மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு அறிந்தனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் அரசு பள்ளிக்கு இலவசமாக கணினியை வழங்கியுள்ளனர். இந்த முயற்சிக்கு அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!