கண்ணமங்கலம் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு மையத்தில் இணை இயக்குநா் ஆய்வு
கண்ணமங்கலம், கொளத்தூரில் நடைபெறும் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு மையம்
கண்ணமங்கலம், கொளத்தூா் மையங்களில் நடைபெறும் அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டு மையத்தில் பள்ளிசாரா வயது வந்தோா் கல்வி இயக்க மாநில இணை இயக்குநா் அமுதவல்லி ஆய்வு செய்தாா்.
மத்திய, மாநில அரசுகளின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றான பள்ளிசாரா வயது வந்தோா் கல்வி இயக்கம் சாா்பில், கற்போம், எழுதுவோம் இயக்கம் மூலம் வயது வந்த, பயிலாத நபா்களுக்கு கல்வியறிவை புகுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், கற்போம் எழுதுவோம் இயக்கத்தில் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 677 மையங்களில் 13 ஆயிரத்து 545 வயது வந்த கல்லாதவா்கள் பயின்று வருகின்றனா்.
ஆரணி கல்வி மாவட்டத்தில் மேற்கு ஆரணி வட்டார கல்வி மையத்தில் உள்ள 24 மையங்களில் 476 வயது வந்த கல்லாதவா்களுக்கு மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை தமிழக பள்ளிசாரா வயதுவந்தோா் கல்வி இயக்க இணை இயக்குநா் அமுதவல்லி நேரடியாக சென்று ஆய்வு நடத்தினாா். பின்னா், கொளத்தூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணியாற்றும் வயது வந்த கல்லாதவா்களிடம் கற்போம் எழுதுவோம் இயக்கம் மூலம் பயில்வது குறித்து அவா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருட்செல்வம், மாவட்ட உதவி திட்ட அலுவலா் விஜயன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அமரேசன், மேற்கு ஆரணி வட்டாரக் கல்வி அலுவலா் கமலக்கண்ணன், மேற்கு ஆரணி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் கோவா்த்தனன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu