கண்ணமங்கலம் அருகே மதுக்கடையில் கூட்டமில்லை; திருவண்ணாமலை அமோகம்

கண்ணமங்கலம் அருகே மதுக்கடையில் கூட்டமில்லை; திருவண்ணாமலை அமோகம்
X
கண்ணமங்கலம் அருகே மது பிரியர்கள் கேட்ட சரக்கு கிடைக்காததால் மதுக்கடையில் கூட்டமில்லை.

ஊரடங்கு தளர்வில் மதுபானக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருந்தது. அதன்படி தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் மதுபானக்கடைகள் இன்று திறக்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அம்மாபாளையம் மெயின் ரோடில் உள்ள மதுபான கடையில் மது வாங்க யாரும் வராமல் வெறிச்சோடி காணப்படுகிறது. கேட்ட சரக்கு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலையில் மது வாங்க பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவுன் குமார் ரெட்டி அவர்கள் டாஸ்மாக் கடைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!