சுடுகாட்டுப் பாதை இல்லை; வயல்வெளியில் சவத்தை எடுத்துச்செல்லும் அவலம்

சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் வயல்வெளியில் தூக்கிச்சென்ற சவம்.
சேத்துப்பட்டு அடுத்த வெண்பாக்கம் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அரசு அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி என அனைத்தும் செய்து கொடுத்து இருந்தாலும், சுடுகாட்டு பாதை வசதி மட்டும் மூன்று தலைமுறையாக இல்லாமல் உ்ளளது. எப்போதெல்லாம் இக்கிராமத்தில் இறப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சவத்தை வயல் வெளியில் சேறும் சகதியிலும் நெற்பயிரில் கடந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து கிராம பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், என பலரிடம் மனுக்கள் அளித்து இதுவரை நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய செயலாளர் கூறுகையில், தற்போது சுடுகாடு பாதைக்கு வயல்வெளி நிலங்களின் உரிமையாளர்களிடம் இடத்தை பெற முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களிடம் பேசி மாவட்ட நிர்வாகம் சுடுகாடு பாதை வசதியும் எரிமேடை வசதியும் செய்து தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu