/* */

பிரம்மோற்சவ விழாவிற்கு முன்பே புதிய தேர் வெள்ளோட்டம் விடப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு

Brahmotsavam Festival - ஆரணி சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டத்துக்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

பிரம்மோற்சவ விழாவிற்கு முன்பே புதிய தேர் வெள்ளோட்டம் விடப்படுமா? பக்தர்கள் எதிர்பார்ப்பு
X

அதிகாரிகளுக்காக காத்திருக்கும் புதிய தேர்.

Brahmotsavam Festival -ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத கில்லா சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா மற்றும் ரத சப்தமி சமயத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும். இந்த கோவிலில் உலா வந்த மரத்தேர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் சேதம் அடைந்தது. பக்தர்கள் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்க அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அரசின் சார்பில் ரூ.18 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கு மக்கள் பங்களிப்புடன் ரூ.34 லட்சம் மதிப்பில் தேர் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற வேண்டும் அதன் பின்னர் தான் பிரம்மோற்சவம் திருத்தேர் திருவீதி உலா நடைபெறும்.

தற்போது வருகிற புரட்டாசி மாதம் பிரம்மோற்சவ விழா வரும் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 7 ம் நாள் 3.10.22 ஆம் தேதி திருத்தேர் திருவீதி உலா நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவின்போது தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவிதி உலா நடைபெறும்.

இந்த ஆண்டு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது புதிய தேரில் பெருமாள் திருவிழா நடைபெற வேண்டும் என பக்தர்களும் அப்பகுதி மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம் துறை அதிகாரிகளின் அனுமதி கிடைக்க பிறகு தான் நடைபெறும் என்பதால் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தேர் வெள்ளோட்டம் பிரம்மோற்சவ விழாவுக்கு முன்னதாகவே நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 1 Sep 2022 10:33 AM GMT

Related News