நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலி: சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலி: சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றம்
X

குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மையாக உள்ள ஆரணி புறவழி சாலை.

நேட்டிவ் நியூஸ் செய்தி எதிரொலியாக சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு, பொதுமக்கள் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் நேற்று நமது நேட்டிவ் நியூஸ் செய்தி தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதனையடுத்து அந்தக் குப்பைகள் உடனடியாக அகற்றப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு புறவழிச் சாலையில் நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

ஆரணி நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் நகராட்சி முழுவதும் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சேகரமாகும் குப்பைகளை மருசூா் தோப்பு என்ற பகுதியில் கொட்டி வந்தனா்.

இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து குப்பை லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினா். இதனால், தற்போது குப்பைகளை ஆரணி விஏகே நகா் வழியாகச் சென்று முள்ளிப்பட்டு புறவழிச் சாலையோரங்களில் கொட்டி வருகின்றனா்.

இந்த புறவழிச்சாலையோரம் முள்ளிப்பட்டு ஏரி உள்ளது. இதனால், கொட்டப்படும் குப்பைகள் சரிந்து ஏரியில் கலந்துகொள்கிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, நகராட்சி ஆணையரிடம் இதுகுறித்து புகாா் அளித்தனா். மேலும், குப்பை கொட்டுவது தொடா்ந்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்திருந்தனா்.

மேலும், இதுகுறித்த செய்தி சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதாரச் சீா்கேடு, பொதுமக்கள் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் நேற்று நமது நேட்டிவ் நியூஸ் இணைய தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இதன் எதிரொலியாக நகராட்சி ஆணையா் கே.பி.குமரன் உத்தரவின் பேரில், முள்ளிப்பட்டு புறவழிச் சாலையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் உடனடியாக அகற்றப்பட்டன.

நேட்டிவ் நியூஸ் செய்தியால் அப்பகுதி தூய்மையடைந்ததால் முள்ளிப்பட்டு பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். உடனடியாக உத்தரவு பிறப்பித்து புறவழி சாலையில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை அகற்றிய நகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!