ஆரணி பாலிடெக்னிக்கில் தேசிய கருத்தரங்கம்
ஆரணி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம்
ஆரணி டாக்டா் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரியில், 2 கே 24 என்ற தலைப்பில் தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பேசிக் என்ஜினியரிங் ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். மேலும், இத்துறைகளைச் சேர்ந்த மாணவா்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். இது தவிர, வேலூா், ஒசூா், சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாலிடெக்னிக்கிக் மாணவா்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா்.
கல்லூரி முதல்வா் பி.ஸ்டாலின் முன்னிலை வகித்தாா். ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரி முதல்வா் வி.திருநாவுக்கரசு, எலக்ட்ரிக்கல் துறைப் பேராசிரியா் டி.இளங்கோ ஆகியோா் கருத்தரங்கில் நடுவா்களாக பங்கேற்றனா். ஒவ்வொரு துறையிலும் சிறந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. ஏ.சி.எஸ். கல்விக் குழுமத்தின் தனி அலுவலா் காா்த்திகேயன், ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் கலைக் கல்லூரி முதல்வா் சுகுமாரன், வேலைவாய்ப்பு அலுவலா் கந்தசாமி, ஸ்ரீபாலாஜி கல்வியியல் கல்லூரி முதல்வா் (பொ) பிரபு மற்றும் அனைத்துத் துறை தலைவா்கள் பாலசுந்தரம், காா்த்திகேயன், ஆகியோா் கருத்தருங்கை வழி நடத்தினா். நிகழ்ச்சியில் அனைத்து ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
அரசுக் கல்லூரியில் தாவரவியல் துறை மன்ற விழா
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறை சாா்பில் தாவரவியல் துறை மன்ற விழா நடைபெற்றது.
விழாவுக்கு தாவரவியல் துறைத் தலைவா் வெ.கங்காதேவி முன்னிலை வகித்தாா். தலைமை வகித்த கல்லூரி முதல்வா் கலைவாணி தாவரங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் தாவரவியல் துறை தலைவரும், ஸ்ரீசக்தி கல்வி அறக்கட்டளைத் தலைவருமான பக்தவச்சலு பங்கேற்று, 'நம் வாழ்வில் தாவரங்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசினாா்.
மேலும், ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை கல்லூரி முதல்வரிடம் வழங்கி, தாவரவியல் துறை சாா்பில் தேர்வில் முதலிடம் பெறும் மாணவா்களுக்கு பரிசு வழங்க அறிவுறுத்தினாா். நூல் வெளியீடு தாவரவியல் துறை முன்னாள் மாணவா் வசந்தகுமாா் எழுதிய, 'என் மன எண்ணங்கள்' என்ற நுாலை சிறப்பு விருந்தினா் பக்தவச்சலு வெளியிட கல்லூரி முதல்வா் கலைவாணி பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் தாவரவியல் துறை இணைப் பேராசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu