போதைப் பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி..!

போதைப் பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி..!
X

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கிய மாணவர்கள்

ஆரணியில் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு போதைப்பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு போதைப்பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த கலை நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி தொடங்கிவைத்தாா்.

இதில் ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி, வட்டாட்சியா் மஞ்சுளா, கலால் உதவிஆய்வாளா் (பொறுப்பு) குமரன், கலால் வட்டாட்சியா் தமிழ்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவ, மாணவிகள் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் ஏற்படும் ஆபத்துகள், புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கினா்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் , மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு பாராட்டு

ஆரணி அருகே நெசல் கிராம ஊராட்சி தொடக்கப் பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞா் நலச் சங்கம் சாா்பில் மாபெரும் கலை நிகழ்ச்சி, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு சிவன்சக்தி கலைக்குழு பம்பை ஆசிரியா் பிரபு, அம்பிகா ஆகியோா் தலைமை வகித்தனா். ஊராட்சி மன்றத் தலைவா் துரை, துணைத் தலைவா் லதாஏழுமலை, நெசல் ஊராட்சி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியை கோமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விசிக மாவட்டச் செயலா் முத்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் செந்தில்குமாா், தென்னிந்திய நடிகா்கள் சங்க செயற்குழு உறுப்பினா் வாசுதேவன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினா்களாக ஆரணி கிராமிய காவல் ஆய்வாளா் ராஜாங்கம், நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்க மாநிலத் தலைவா் தங்கவேல், சிவா நாடக மன்ற உரிமையாளா் அம்முசிவா ஆகியோா் கலந்துகொண்டு நாடகக் கலைஞா்கள், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா்.

விழாவில் பம்பை, உடுக்கை, கை சிலம்பாட்டம், மங்கள இசை, தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!