முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ தான் தோன்றி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக விநாயகர் வழிபாடு, கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மகா லட்சுமி பூஜை, பூர்ணாகுதி, வேதபாராயணம், திருமுறை பாராயணம், 16 வகை தீபாராதனை ஆகியவை நடந்தது. அதையடுத்து நேற்று காலை 9 மணி அளவில் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் குன்னத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா
திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, இளப்பகுணம் ஊராட்சியில் அமைந்துள்ள முனீஸ்வரன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்று கலசம் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளரும் , போளூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான L. ஜெயசுதா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் கார்த்திகேயன், போளூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விமல்ராஜ் , முன்னாள் நகரச் செயலாளர் ஏழுமலை, இளப்பகுணம் கிளை செயலாளர் சரவணன்,
மற்றும் கழக நிர்வாகிகள், மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். அனைவரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எழுவாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் வளாகம் புனரமைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோவில் வளாகத்தை சுற்றி வந்து கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி வழிபட்டனர்.
இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீ புடவை காரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம் கோணலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ புடவை காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் ஸ்ரீ புடவை காரியம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu