2 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்

2 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் போராட்டம்
X

துப்புரவு பணியாளர்களிடம் ஆரணி நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்

https://www.maalaimalar.com/news/district/tiruvannamalai-news-salary-not-paid-for-2-months-495306

இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததால் ஆரணி நகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் தற்போது நகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்களாக 54 பேர் பணியாற்றி வருகின்றனர். நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த 2 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை இதனால் ஆணையர் மற்றும் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நகராட்சி அதிகாரிகளை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஓன்றிணைந்து ஆரணி நகராட்சியை முற்றுகையிட்டு திடீரென ஆணையர் அறையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக கூறினார்கள். இதனால் அதிகாரிகளிடம் துப்புரவு பணியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி வரும் 10ம் தேதிக்குள் துப்புரவு பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள 2 மாத சம்பளம் வழங்குவதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!