ஆரணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் வேலை நிறுத்தம்
வேலை நிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ள அரிசி ஆலை.
மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவித்தது. இதை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிசி மொத்த சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் களம்பூர் பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. 5 சதவீதம் ஜி.எஸ்.டி இந்த அரிசி ஆலை தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆரணியில் இருந்து உற்பத்தி செய்யும் அரிசி சென்னை பெங்களுரு கோயம்புத்தூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபட்டு வருகின்றன. நாள் ஓன்றுக்கு சுமார் 300 லிருந்து 500 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள், அரிசி உற்பத்தியாளர்கள், அரிசி வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கபடுவதாக தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசை கண்டித்து இன்று ஆரணியில் சுமார் 200கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் அடைத்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மத்திய அரசு அறிவித்திருக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி யால் அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாகவும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu