அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல்

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல்
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன். மீண்டும் அதிமுக சார்பில் ஆரணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை கழகம் வேட்பாளராக அறிவித்தது.

ஆரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட ஆரணி வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடியிடம், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வேட்புமனுவை வழங்கினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!