ஆரணி பகுதியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

ஆரணி பகுதியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்.

ஆரணி பகுதியில் இதுவரை 291018 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என வட்டார மருத்துவ அலுவலர் சுதா தெரிவித்துள்ளார்.

ஆரணி நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆரணியில் பழைய, புதிய பஸ் நிலைய வளாகங்களிலும், ஆரணி ஹோஸ்ட் லயன்ஸ் சங்க வளாகத்திலும் சிறப்பு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

மேலும் நகராட்சி சுகாதார களப்பணியாளர்கள் பஸ் நிலைய வளாகங்களில் உள்ள கடைகளில் உள்ள கடைக்காரர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் பூஸ்டர் ஊசி போட்டுக் கொள்ளாதவர்கள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். நேற்று நடைபெற்ற முகாமில் 4150 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

ஆரணி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 432 மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதுவரை 291018 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என வட்டார மருத்துவ அலுவலர் சுதா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!