மாண்டஸ் புயல்: ஆரணியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஆலோசனை
வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள்.
மாண்டஸ் புயல் உருவாகியுள்ளதால் ஆரணி வட்டாரத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் வட்டாட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, துணை வட்டாட்சியர் சங்கீதா, நீர்வளத்துறை உதவி பொறியாளர் ராஜ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்துக்கு வட்டாட்சியா் ஜெகதீசன் தலைமை வகித்துப் பேசியதாவது:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டா்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, மருத்துவத் துறையினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும். ஆரணி வட்டாரத்தில் 11 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளுக்கு அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.
கூட்டத்தில் நகராட்சி அதிகாரிகள் , காவல்துறை அதிகாரிகள் , வருவாய்த்துறை அதிகாரிகள் , நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டஅனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu