விலங்குகளை வேட்டையாட சென்றவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது

விலங்குகளை வேட்டையாட சென்றவர் நாட்டு துப்பாக்கியுடன்  கைது
X

கைது செய்யப்பட்ட பிரகாஷ்.

திருவண்ணாமலை சொரகுளத்தூர் காப்புக்காட்டில் நாட்டு துப்பாக்கியுடன் விலங்குகளை வேட்டையாட சென்றவர் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவனாம்பட்டு கிராமம் அருகே சொரகுளத்தூர் காப்பு காட்டில் மர்ம நபர்களால் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான வனத்துறையினர் சொரகுளத்தூர் காப்புக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த கொண்டம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 29) என்பவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் அவருடன் இருந்த மற்றொரு நபர் அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை கீழே வீசி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதையடுத்து பிரகாஷை வனத்துறையின் அவர்களது அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து 2 நாட்டு துப்பாக்கியையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

விஷம் குடித்து பிளஸ்-1 மாணவி தற்கொலை:

ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டம் என்பவரின் மகள் தர்ஷிகா (வயது 16). இவர் ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தர்ஷிகாவின் தாய் பிரியா ஆரணி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story