ஆரணி அருகே ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்

ஏரிக் கால்வாய் ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஏரிக் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டன.
ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் நேத்தப்பாக்கம் ஏரிக்குச் செல்லும் காட்டேரியன் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயை ஆக்கிரமித்து காா்த்தி, லட்சுமணன், சாமந்தி ஆகியோா் வீடுகள் கட்டியிருந்தனா். இந்த வீடுகளை அகற்றக் கோரி, சங்கா் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா். இதனைத் தொடா்ந்து நீதிமன்றம் காட்டேரியன் கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வேண்டும் என தீா்ப்பளித்தது.
இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்படி இன்று பொதுப்பணித்துறையுடன் இணைந்து, காவல்துறை உதவியுடன் தாசில்தார் மஞ்சுளா தலைமையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.
அப்போது, ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளா்கள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்கப் போவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் அவா்களிடம் நீதிமன்ற தீா்ப்பை எடுத்துக்கூறி பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும், இரும்பேடு பகுதியில் வீடு கட்டிக்கொள்ள இலவச மனைப் பட்டா உடனடியாக வழங்குவதாகக் கூறி அவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கினா். இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அமைதி காத்தனா். பின்னா், வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டுச் சென்றனா்.
உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம்
ஆவணியாபுரம் கிராமத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆவணியாபுரம் கிராமத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது, சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
செய்யாறு சுகாதார பூச்சியியல் வல்லுனர் துரைராஜ் தலைமை தாங்கி மலேரியா தினத்தை முன்னிட்ட கொசுவினால் ஏற்படும் யானைக்கால் நோய், காய்ச்சல் உள்ளிட்டவை குறித்தும், கொசுக்களை ஒழிப்பது குறித்தும் பேசினார்.
மேலும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி, வையாபுரி,முகமது கவுஸ் மற்றும் டெங்கு, களப்பணியாளர்கள, பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலாளர் பலராமன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu