ஆரணி அருகே ஏரி கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள அடையபலம் ஏரியில் இருந்து மூன்று மதகுகள் வழியாக மெய்யூர் வரை நீர் செல்கிறது. ஏரி கால்வாயை ஒட்டியுள்ள விவசாயிகள் கால்வாயை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர்.
அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவா என்பவரின் நிலம் ஏரிக்கு அருகே இருந்தாலும், ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பால் இவரது நிலத்திற்கு நீர் வரத்தின்றி விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஏரி கால்வாயை சீரமைக்க பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளை சந்தித்து அவர் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதன் காரணமாக அவர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார், வழக்கு விசாரணையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை வட்டாட்சியர் பெருமாள் தலைமையில் வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர்.
ஆரணி கிராமிய காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu