கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
X

கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆரணி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையம் தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர், வீரஆஞ்சநேயர் கோவிலில் 15-ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உற்சவர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத்தொடர்ந்து தினமும் காலை, மாலை உற்சவர் அன்னம், சிம்மம், அனுமன், சேஷ, கருட, யானை வாகனங்களில் எழுந்தருள்கிறார். தேரோட்டம், குதிரை, சந்திர பிரபை வாகன சேவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் ரா.நடராஜன், கோவில் நிர்வாக அலுவலர் ம.சிவாஜி மற்றும் கோதண்டராமர், வீர ஆஞ்சநேயர் கோவில் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி