கண்ணமங்கலம் காவல் நிலைய கட்டிடம் திறப்பு விழா

கண்ணமங்கலம் காவல் நிலைய கட்டிடம் திறப்பு விழா
X

ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

கண்ணமங்கலத்தில் ரூ.5 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட காவல் நிலைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

கண்ணமங்கலம் போலீஸ் நிலைய கட்டிடம் ரூ.5 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் தற்காலிகமாக போலீஸ் நிலையம் கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடத்தில் இடமாற்றம் செய்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் புனரமைக்கப்பட்ட போலீஸ் நிலைய கட்டிடம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா வரவேற்றார். ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் கண்ணமங்கலம் பேரூராட்சி தலைவர் மகாலட்சுமிகோவர்த்தனன் கலந்து கொண்டு, குத்துவிளக்கு ஏற்றினார். ஊராட்சி மன்ற தலைவர்கள், மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள்சீனிவாசன், துணை தலைவர் ஆ.வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர்கள், துணை தலைவர்கள், மற்றும் கண்ணமங்கலம் பகுதி வியாபாரிகள் , கண்ணமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரமேஷ்பாபு, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேந்திரன், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கணபதி ஹோமத்துடன் யாகபூஜைகளும் நடைபெற்றது. முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Tags

Next Story