ஆரணியில் கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி ஆணை வழங்கல்

ஆரணியில் கல்லூரி வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி ஆணை வழங்கல்
X

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய கல்லூரி தலைவர் ஏ சி சண்முகம்.

ஆரணி எஸ் பி சி கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆரணியில் ஏசிஎஸ் நகரில் அமைந்துள்ள ஏசிஎஸ் கல்வி குழுமத்தை சேர்ந்த ஸ்ரீ பாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் சென்னை பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் மெக்கானிக் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு கட்ட தேர்வுகளை நடத்தி, 100 பேரை தேர்வு செய்தன.

இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை, கல்லூரி தலைவர் ஏ.சி. சண்முகம் வழங்கினார். கல்லூரி செயலாளர் ஏ.சி. பாபு, ஏ.சி .ரவி, கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, துணை முதல்வர் வெங்கட ரத்தினம், கல்லூரி நிர்வாக அலுவலர்கள் ,வேலைவாய்ப்பு அலுவலர் கந்தசாமி ,துறைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future