அதிமுக அரசின் திட்டங்களை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனைகளா? எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசின் திட்டங்களை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனைகளா? எடப்பாடி பழனிசாமி
X

ஆரணியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி.

அதிமுக அரசின் திட்டங்களை ரத்து செய்தது தான் திமுக அரசின் சாதனைகள் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதான கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஆரணி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஜி.வி. கஜேந்திரனை ஆதரித்து நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் ஆரணி-சேவூர் சாலை சந்திப்பு அருகே பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் இந்த ஆரணி மக்களவைத் தொகுதியில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் திருவண்ணாமலை மாவட்டத்திலும் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இப்பகுதியில் பிரதான தொழில் விவசாயம் ஆகும். இப்பகுதியில் வாழும் மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர் .

பட்டு மற்றும் நெசவுத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர். இந்த தொழில்கள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் சிறப்பாக நடந்தது. ஆனால் இப்போது இந்த தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து விட்டது. இந்த தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் வெற்றி பெற்றால் உங்களுடைய குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.

ஆரணி பிரச்சாரத்திற்கு நான் வரும் வழியில் மக்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்துள்ளீர்கள்.

உங்களுடைய பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர் கஜேந்திரனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளும் தான் வெல்லும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் சி வி, சண்முகம், மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதா, மற்றும் விழுப்புரம் திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு