சர்வதேச சுற்றுச்சூழல் தினம்: சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி

சர்வதேச சுற்றுச்சூழல் தினம்: சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி
X

ஆரணி கோட்டை மைதானத்தில் சிலம்பம் சுற்றிய டி.எஸ். பி. ரவிச்சந்திரன்,  மற்றும் வீரர்கள்

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானத்தில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சிலம்பு சுற்றுதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆரணி கோட்டை மைதானத்தில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இணைந்து 53 மரக்கன்று நட்டு 53 நிமிடங்களில் 53வகையான சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி சிலம்பம் அறக்கட்டளை ஆசிரியா் தனக்கோட்டி , ஏற்பாட்டில் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் டிராகன் ஜெட்லி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் மஞ்சுளா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், டி.எஸ். பி. ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும் டி.எஸ். பி. ரவிச்சந்திரன் சிலம்பம் சுற்றி மாணவர்களுக்கு உற்சாகத்தையும் விழிப்பு ணர்வையும் ஏற்படுத்தினார்.

இதனையடுத்து 122 மாணவர்கள் ஒருங்கிணைந்து ஒரே நேரத்தில் கட்ட கால் சிலம்பம், தலைவர்கள் வேடமணிந்து சிலம்பம் சுற்றி சுருள் வால் ஆணி டம்ளர் பானை மீதும் யோகாசனம் செய்தபடியும் துணியால் கண்களை கட்டி கொண்டு சிலம்பம் சுற்றுதல் ஆகியவற்றில் ஈடுபட்டு சாதனை முயற்சியில் ஈடுபட்டு அசத்தினர்.

மேலும் இந்த சிலம்பம் சாதனை முயற்சியில் 90 வயது முதியவர் ஒருவர் சிலம்பம் சுற்றி பொது மக்களை ஆச்சரியப்படுத்தினார். பின்னர் பிளாஸ்டிக் தவிர்க்க வலியுறுத்தி சிறப்பு விருந்தினர்களுக்கு மஞ்சப்பையை சமூக ஆர்வலர்கள் வழங்கினார்கள். சாதனையின் முடிவில் மாணவர்களுக்கு கோப்பை பதக்கம் சான்றிதழ்களை வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் தீயணைப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா் ஜானகிராமன், சத்தியமூர்த்தி, பெருமாள், மற்றும் சிலம்ப பயிற்சி ஆசான்கள் , பெற்றோர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!